SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருமானவரி விசாரணைகளுக்கு நேரில் ஆஜராக தேவையில்லை ... எல்லாமே இனி ஆன்லைனில்தான்

2018-02-14@ 02:28:44

புதுடெல்லி: வருமான வரி விசாரணைகளை ஆன்லைன் மூலம் மின்னணு முறையில் மேற்கொள்ள மத்திய நேரடி வரிகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை கள அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:   வருமான வரி தொடர்பான வழக்குகளில் விசாரணைகள் அனைத்தும் மின்னணு முறையில் நடைபெற வேண்டும். ரெய்டு நடத்தி பிடிபட்ட ஆவணங்கள் மற்றும் அவை தொடர்பான விசாரணைகளுக்கு இது பொருந்தாது. மற்றபடி இதர சாதாரண வருமான வரி வழக்கு விசாரணைகளை மின்னணு முறையில் மேற்ெகாள்ளலாம். ஒருவேளை, மின்னணு விசாரணைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், விசாரணையை சில காலத்துக்கு ஒத்தி வைக்கலாம். 2016 ஜூன் 1ம் தேதியில் அமலுக்கு வந்த நிதிச்சட்டம், தகவல் தொடர்பு உட்பட விசாரணைகள், விளக்கங்கள் அனைத்தும் மின்னணு முறையில் மேற்கொள்ள அனுமதிக்கிறது.

மின்னணு விசாரணை வசதி இல்லாத அலுவலகங்களில் வரும் மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே பழைய முறையில் விசாரிக்க விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு வருமானவரி தொடர்பான நோட்டீஸ்கள், உத்தரவுகள், தொடர்புகள், அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மின்னணு முறையில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருமான வரி ஏய்ப்பு, முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. பல லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவற்றில் பல வழக்குகளில் இ-மெயில் மூலமாக சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்கள் வருமானவரி இணையதளத்தில் தங்கள் விளக்கத்தை சமர்ப்பித்தனர். ஆவணங்கள் சமர்ப்பித்து விளக்கம் அளிக்க மட்டும் நேரில் ஆஜராகி வந்தனர். மின்னணு தகவல் தொடர்புகளை வருமான வரித்துறை ஊக்குவித்து வருகிறது. தற்போது, அனைத்துமே மின்னணு முறையில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதால், வழக்குகளுக்கு நேரில் ஆஜராக வருமான வரி அலுவலகத்துக்கு  அலைய வேண்டிய அவசியம் இருக்காது என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்