SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலர் தினத்தை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு கொய்மலர் விற்பனை

2018-02-14@ 02:26:15

குன்னூர்: காதலர் தினத்தை முன்னிட்டு குன்னூரில ரூ.1 கோடிக்கு கொய்மலர்கள் விற்பனையாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பசுமை குடில் மூலம் கார்னேசன், ஆந்தோரியம், லில்லியம், ஜெர்பரா உள்ளிட்ட கொய்மலர்கள் மட்டுமல்லாது ரோஜா மலர்களும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  கடந்த சில மாதங்களாக மலர்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காதலர் தினம் என்பதால் இந்த மலர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, கட்டபெட்டு, கொலக்கம்பை, தூதூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பறிக்கப்பட்ட கொய்மலர்களை கொண்டு தயாரான மலர் கொத்துகளை வாங்கவும், தனியாக ரோஜா உள்ளிட்ட மலர்களை வாங்க காதலர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறனர்.இதனால் மலர்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் குன்னூரில் ரூ.1 கோடி மதிப்பிலான கொய்மலர்கள் பெங்களூர், மைசூர், டெல்லி, மும்பை மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்