SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு பழைய தொழிலுக்கே ஓபிஎஸ் போவார் : டிடிவி தினகரன் பேட்டி

2018-02-14@ 00:48:13

தஞ்சை: ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தஞ்சையில்  நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்லா துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. பொதுப்பணித்துறை முதல் நெடுஞ்சாலைத்துறை வரை 30 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் கொடுத்தால் தான் பணி ஒதுக்கீடு நடக்கும். அப்படி இருக்கும்போது பணி எப்படி தரமானதாக இருக்கும்.

எதிலும் ஊழல் நிறைந்த இந்த ஆட்சியை மக்கள் விரைவில் அகற்றிவிடுவர். ஒருபோதும் தமிழகத்தில் காவி ஆட்சி வராது.   
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தோல்வியடைந்ததற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநலம்தான் காரணம். அவர் அரசியலிலிருந்து விரைவில் ஓரம் கட்டப்படுவார். ஓ.பன்னீர்செல்வம் யாரால் அடையாளம் காட்டப்பட்டாரோ அவராலேயே ஓரம் கட்டப்படுவார். வரும் தேர்தலில் அவர் போட்டியிடும் தொகுதியில் டெபாசிட் இழப்பார். பின்னர் அவர் ஏற்கனவே என்ன தொழில் செய்தாரோ அந்த தொழிலை செய்ய அனுப்பி வைக்கப்படுவார் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்