SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ஏடிபி சேலஞ்சர் 2வது சுற்றில் யுகி பாம்ப்ரி

2018-02-14@ 00:33:33

சென்னை: முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் யுகி பாம்ப்ரி தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் பெர்னபி மிராலெஸுடன் நேற்று மோதிய பாம்ப்ரி 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் மிராலெஸ் கடும் நெருக்கடி கொடுக்க, டை பிரேக்கர் வரை ஆட்டம் இழுபறியாக நீடித்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இந்த செட்டில் பாம்ப்ரி 7-6 (7-3) என்ற கணக்கில் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் நிலை வீரர் ஜோர்டான் தாம்சன் தனது முதல் சுற்றில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் கரிம் முகமதுவை (எகிப்து) வீழ்த்தினார். இந்திய வீரர்கள் மணிஷ் சுரேஷ்குமார், பிரஜ்னேஷ் குணேஷ்வரன் முதல் சுற்றில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்