SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை

2018-02-14@ 00:06:05

போர்ட் எலிசபத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 73 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. தொடக்க வீரர் ரோகித் ஷர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ராம் முதலில் பந்துவீச முடிவு செய்தார். காயம் காரணமாக கிறிஸ் மோரிஸ் விலகியதால், ஸ்பின்னர் ஷம்சி சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோகித் ஷர்மா களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 48 ரன் சேர்த்தனர். தவான் 34 ரன் எடுத்து (23 பந்து, 8 பவுண்டரி) ரபாடா வேகத்தில் பெலுக்வாயோ வசம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தது. கோஹ்லி 36 ரன் (54 பந்து, 2 பவுண்டரி), ரகானே 8 ரன் எடுத்து பரிதாபமாக ரன் அவுட்டாகினர்.

இந்த நிலையில், ரோகித் - ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. நடப்பு தொடரில் தொடர்ச்சியாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்து தடுமாறி வந்த ரோகித், உறுதியுடன் விளையாடி சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 17வது சதமாகும். ரோகித் 115 ரன் (126 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து என்ஜிடி வேகத்தில் விக்கெட் கீப்பர் கிளாசன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே முட்டை போட்டு வெளியேற, ஷ்ரேயாஸ் அய்யர் 30 ரன் எடுத்து என்ஜிடி பந்துவீச்சில் கிளாசனிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 42.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்த இந்தியா மேற்கொண்டு 2 ரன் மட்டுமே சேர்ந்த நிலையில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 44.2 ஓவரில் 238/6 என திடீர் சரிவை சந்தித்தது. டோனியும் 13 ரன் எடுத்து என்ஜிடி பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. ஒரு கட்டத்தில் 300 ரன்னை எளிதாகத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என்ஜிடியின் துல்லியமான பந்துவீச்சு இந்திய அணியின் ஸ்கோரை மட்டுப்படுத்தியது. புவனேஷ்வர் குமார் 19, குல்தீப் யாதவ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் என்ஜிடி 4, ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் தென் ஆப்ரிக்கா துரத்தலை தொடங்கியது.
முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த நிலையில் மார்க்ராம் (32) பும்ரா வேகத்தில் வெளியேறினார். அடுத்ததாக டுமினி (1), டிவில்லியர்ஸ் (6) இரு முக்கிய விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா வீழ்த்தி அசத்தினார். நிலைத்து ஆடி அரைசதம் அடித்த அம்லா 71 ரன்னில் ரன்அவுட்டாக, ஆட்டம் முழுமையாக இந்தியாவின் கைக்கு வந்தது.

மில்லர் (36) சாஹல் சுழலில் வெளியேறினார். பெலுக்வாயோ (0) விக்கெட்டை வீழ்த்திய குல்தீப் யாதவ், தென் ஆப்ரிக்காவின் கடைசி நம்பிக்கையாக இருந்த கிளாசன் (39), ஷம்சி (0), ரபாடா (3) ஆகியோரை ஒரே ஓவரில்  வெளியேற்றி இந்தியாவின் வெற்றியை உறுதி படுத்தினார். கடைசியாக மோர்கல் (1) சாஹல் சுழலில் ஆட்டமிழக்க தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று கோஹ்லி அன்ட் கோ வரலாற்று சாதனை படைத்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் 4, சாஹல், பாண்டியா தலா 2 விக்கெட், பும்ரா 1 விக்கெட் கைப்பற்றினர். 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது. ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்