SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூர் அருகே ரேஷனில் புழுத்துப்போன அரிசி விற்பனையாளர் சஸ்பெண்ட்

2018-02-13@ 21:29:57

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக குடோன்களில் இருந்து அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
 நேற்று முன்தினம் குன்னம் தாலுகா, வேப்பூர் அருகேயுள்ள எழுமூர் ஊராட்சி, காருகுடி கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் பச்சரிசி, புழுங்கல் அரிசி வழங்கப்பட்டன. இதில் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி என்பவர் புழுங்கல் அரிசியை வாங்கிச் சென்று வீட்டிற்கு போய் பார்த்த போது அரிசி புழுத்து போய் இருந்தது தெரியவந்தது. மேலும் அரிசி கட்டி, கட்டியாக துர்நாற்றத்துடன் காணப்பட்டது.

இந்த அரிசியை  ஜெயக்கொடி, அங்குள்ள மகாமாரியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்று, ஆத்தா எங்களுக்கு நல்ல உணவாகக் கொடு. இதை நீயே எடுத்து கொண்டு நீதிவழங்கு எனக்கூறி கோயில் உள்புறம் தரையில் கொட்டி விட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
 இந்நிலையில் நேற்று மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயலெட்சுமி, மற்றும் குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்திபெருமாள், மாவட்ட கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் பாண்டித்துரை ஆகியோர் காருகுடி ரேஷன் கடைக்கு  சென்று அங்கு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி குறித்து விசாரித்தனர்.

அப்போது அங்கு கடந்த நவம்பர் மாதத்தில் கொடுத்த அரிசியை கேட்கும்போது மக்களிடம் அரிசி தீர்ந்துவிட்டது எனக்கூறி, விநியோகிக்காமல் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த அரிசி மூட்டைகள் தரமற்றதாகவும், கட்டிகளாகவும் இருந்ததை கண்ட அதிகாரிகள் மூட்டைகளை கைப்பற்றி அவற்றிற்கு பதில் புதிய தரமான அரிசி மூட்டைகளை உடனடியாக மாற்றிக்கொடுத்தனர். இது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர் கவிதாவிடம் விளக்கம் கேட்டபோது அவர் முறையான விளக்கம் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்ய கூட்டுறவு துணை பதிவாளருக்கு, மாவட்ட வழங்கல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி காருகுடி ரேஷன் கடை விற்பனையாளர் கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்