SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை இளம்பெண் சடலத்துடன் பூஜை செய்த பெரம்பலூர் மந்திரவாதி மீண்டும் தகிடுதத்தம்: ‘ஆன்மிக பயிற்சி’ வழங்குவதாக மோசடி

2018-02-13@ 21:18:02

பெரம்பலூர்: வேலூர் மாவட்டம் புங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர்  கோபிநாத்(24).   பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் அளித்த மனு:
2016ம் ஆண்டு வந்த மகா காளி மந்திராலயம் என்ற விளம்பரத்தைப் பார்த்து, பெரம்பலூரில் தங்கியிருந்த மந்திரவாதி கார்த்திகேயனை நேரில் சந்தித்தேன். அப்போது எங்கள் குடும்பத்தால் விற்கமுடியாமல் திண்டாடி வந்த நிலத்தை விற்பதற்கு வழிகேட்டபோது,  குடும்பப் பிரச்னைகளை மந்திரம் மூலம் தீர்ப்பதாகவும், உச்சிஷ்ட கணபதி எனப்படும் பயிற்சியை கற்றுத் தருவதாகவும் சொன்னார். இதை நம்பி முதலில் ரூ.15 ஆயிரத்தில்  தொடங்கி ரூ.5 லட்சம் வரை கார்த்திகேயனிடம் கொடுத்தேன்.

பெரம்பலூரில் 2017ம் ஆண்டு சென்னை பெண்ணின் சடலத்தை வைத்து பூஜை நடத்தி கைதானவர்தான் கார்த்திகேயன் என்பதை அறிந்து திடுக்கிட்டேன். இதனால் பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டு பயிற்சியில் இருந்தும் வெளியேறினேன். இதற்கிடையில் பெரம்பலூர் போலீசாரிடம் கார்த்திகேயன் கைதான உடன் புகார் கொடுத்தேன். எனது புகாரையும் ஆதாரமாக கொண்டே அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தனர்.  பணத்தை சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் திருப்பித் தருவதாகக் கூறினார். சில மாதங்கள் முன்பு  சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்திகேயன் 2 தவணைகளில் பணத்தை தருவதாக எஸ்ஐ அகிலன் முன்னிலையில் என்னிடம் உறுதியளித்தார்.

20 முறைக்கு மேல் அலைந்தும் இப்போது வழக்கு முடியட்டும்... தருகிறேன் என்கிறார். இப்போதும் பல இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றி பணம் பறித்து வருகிறார். அவர்மீது விரைந்து நடவடிக்கை எடுத்து எனது பணத்தைப் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார். தற்போது மந்திரவாதி பெரம்பலூரில் இல்லை. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடிக்கடி ஆன்மிக பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் முகாமிட்டு மக்களை ஏமாற்றி வருவதாக  கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்