SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்தூரி விழாவுக்காக பாய்மரம் ஏற்றம்: நாகூர் தர்காவில் 26ல் சந்தனக்கூடு

2018-02-13@ 21:14:05

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்கா பிரசித்தி பெற்றது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மாற்று மதத்தினரும் தர்காவுக்கு வருகை தருவர்.  தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்.  இந்தாண்டு 461வது கந்தூரி விழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 26ம் தேதி இரவு நடைபெறுகிறது. நாகையில் இருந்து புறப்படும் ஊர்வலம், மறுநாள் அதிகாலை தர்காவுக்கு வந்தடைந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

தர்காவில் இன்று அதிகாலை பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய் மரம் ஏற்றப்பட்டது. இந்த பாய் மரத்தில் தான் வரும் 17ம் தேதி கொடியேற்றப்படும். பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கந்தூரி விழாவுக்கான ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X