SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் அமைதி திரும்ப பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: முதல்வர் மெகபூபா வலியுறுத்தல்

2018-02-13@ 20:25:23

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் எனில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் மெகபூபா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதிகளில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை கண்டுகொள்ளாமல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோர கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வீடுகள் சேதமடைவதுடன், உயிரிழப்புகளும் நடப்பதால் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் சூழல் உள்ளது.

இதுமட்டுமின்றி, தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஜம்முவில் உள்ள ராணுவ முகாமில் இருதினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ராணுவ குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ முகாமில் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலால் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்றால், இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அம்மாநில முதல்வர் மெகபூபா வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரச்னைகளுக்கு போர் தீர்வாகாது என தெரிவித்துள்ள அவர், இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்