SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகாசி தெய்வானை நகரில் சேதமடைந்த தடுப்புச்சுவர் பாலத்தால் விபத்து அபாயம்

2018-02-13@ 20:01:57

சிவகாசி: சிவகாசி நகராட்சி தெய்வானை நகரில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  சிவகாசி நகராட்சி 32வது வார்டு பகுதியில் தெய்வானை நகர் உள்ளது.  100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அச்சகங்கள், பாலித்தீன் கம்பெனி, பட்டாசு கடை, கட்டிங், லேமினேசன் கம்பெனிகளும் இப்பகுதியில் அதிகளவில் இயங்கி வருகின்றன. இங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

சிவகாசி நகராட்சி பகுதியில் இருந்து வரும் மழைநீர் தெய்வானை நகர் கிருதுமால் ஓடை வழியாக மீனம்பட்டி கண்மாயை அடைகிறது. கிருதுமால் ஓடையில் தடுப்புச்சுவர் தரமின்றி கட்டப்பட்டதால் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. தெய்வானை நகர் நுழைவு பகுதியில் உள்ள காந்தி ரோட்டில் கிருதுமால் ஓடைக்கு மேலே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் தடுப்பு சுவர் முற்றிலும் இடிந்து கிடக்கிறது. இதனால் இந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்