SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது

2018-02-13@ 19:42:33

சித்தூர்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் உப்பகுட்ட மண்டலம் கூனவரம் பகுதியை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவர் கடந்த 2ம்தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர், அமலாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் ெகாடுத்தனர். போலீசார், மாணவியின் பாடப்புத்தகங்களை ஆய்வு செய்தனர். அதில் 2 செல்போன் எண்கள் இருந்தது.
அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அந்த எண், மல்லவரம் மண்டலம் போடிலங்கா கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்கிற சந்து(28) என்பவருக்கு சொந்தமானது என்பதும், மாணவியை ரமேஷ் கடத்திச்சென்று திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ரமேஷை நேற்று பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், 7ம் வகுப்பு படித்த ரமேஷ் கல்லூரிக்கு செல்லும் பெண்களை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்வாராம், அப்போது அவர்களிடம், பட்டதாரி என்று கூறியுள்ளார். அதன்படி கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். அவருக்கு தற்போது 9 மாத ஆண் குழந்தை உள்ளது. அதேபோல், வேலை வாங்கித்தருவதாக கூறி அமலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவியை கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து அங்கேயே தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து மாயமான 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச்சென்று கூனி நத்தம் கிராமத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு, தனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும், தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவியையும் இவர் காதலித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமேஷ் என்கிற சந்துவை கைது செய்து, இவர் மேலும் பல பெண்களை ஏமாற்றியுள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saaambal_cat11

    சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X