SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீகாரில் பிச்சை எடுத்து கழிவறை கட்டிய பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

2018-02-13@ 17:46:04

சூபால்: பீகார் மாநிலத்தில் 40 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து தனது வீட்டிற்கு கழிப்பறை கட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த செயலுக்கு சூபால் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். சூபால் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமம் பாத்ரா உத்தார். இக்கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அமினா கதூன் அக்கம்பக்கத்து கிராமங்களுக்குச் சென்று தனது வீட்டுக்கான கழிப்பறை கட்டுவதற்காக பிச்சை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கணவரை இழந்து கூலி வேலை செய்யும் 40 வயது அமினா பதின்பருவ சிறுவனின் தாய் ஆவார்.

வீட்டில் ஒரு கழிப்பறை கட்டிக்கொள்வதற்காக அதற்கான நிதியுதவி கேட்டு வட்டார அதிகாரிகளை நாடியபோது அவர்கள் இவரைப் புறக்கணித்துள்ளனர். எனினும் மனம் தளராத அமினா, பிச்சை எடுத்தாவது கழிப்பறை கட்ட முடிவு செய்துள்ளார். அதை சாதித்தும் காட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இக்கிராமத்தில் நடைபெற்ற விழாவில் இப்பெண்ணின் முயற்சியை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். தனது வீட்டுக்கு கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்ட கொத்தனார் மற்றும் சித்தாள் ஆகிய இருவரும் தங்கள் ஊதியத்தை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதையும் விழாவில் அமினா பகிர்ந்துகொண்டார். பிஹாரில் லட்சக்கணக்கான மக்களுக்கு இன்னும் கழிப்பறைகள் கட்டப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X