SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்

2018-02-13@ 16:29:45

கொச்சி: கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொச்சியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான சாகர் பூஷண் கப்பலில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.

படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆணையிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொச்சி துறைமுகத்தில் நடந்த விபத்து குறித்து மிகவும் வருத்தப்படுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்