SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது பார்க்கவில்லை : சசிகலா அண்ணன் மகன் விவேக் தகவல்

2018-02-13@ 15:40:41

சென்னை: மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது பார்க்கவில்லை என சசிகலா அண்ணன் மகனும் ஜெயா டிவி சி.இ.ஓ.வுமான விவேக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தாம் வெளிநாட்டில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாக விவேக் ஜெயராமன் தகவல் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி ஆணையத்தில் ஆஜராக உள்ளதாக விவேக் தகவல் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வவந்த நிலையில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி, எம்பார்மிங் செய்த டாக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நோட்டீஸ் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக் ஜெயராமனை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் நோட்டீஸை ஏற்று விவேக் ஜெயராமன் இன்று விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் கூறியபோது மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தாம் வெளிநாட்டில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்