SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருந்தி வாழ்வதற்காகத்தான் தலைமறைவாக இருந்தேன்: போலீசில் சரணடைந்த ரவுடி பினு வாக்குமூலம்

2018-02-13@ 15:26:05

சென்னை: சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் ரவுடி பினு இன்று சரணடைந்தார். இந்நிலையில் போலீசில் சரணடைந்த ரவுடி பினு வாக்குமூலம் அளித்துள்ளார். தாம் ரவுடி அல்ல என்று அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் பினு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் திருந்தி வாழ்வதற்காகத்தான் தலைமறைவாக இருந்தேன் என்று கூறினார். கரூரில் இருந்த என்னை தம்பிதான் அழைத்து வந்தான் என்று அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பினுவும் மற்ற கூட்டாளிகளும் தப்பியோடினர். தப்பியோடிய ரவுடிகளை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில் ரவுடி பினு போலீசில் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாங்காட்டில் பினுவிடம் விசாரணை

மலையம்பாக்கத்தில் விசாரணை முடிந்த பின் மாங்காட்டில் ரவுடி பினுவிடம் விசாரணை நடைபெற்றது. மாங்காடு காவல் நிலையத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் பினுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்