SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தரப்பு டி20 போட்டி: 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து

2018-02-13@ 15:07:04

வெலிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர், ஆஸி. மற்றும் நியூசி.யில் நடைபெறுகிறது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 72, குப்தில் 65 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ல் சிறப்பாக பந்துவீசிய அடில் ரஷித், மார்க், மார்க் உட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.  
இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியில் டேவிட் மார்லன் 59, அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய ட்ரென்ட் போல்ட், மிட்செல் சான்டர், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் வெற்றி பெற்று நியூசிலாந்து 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்