SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய ரசிகர் மீது இம்ரான் தாஹிர் புகார் : இனவெறியுடன் திட்டியதாக இம்ரான் குற்றச்சாட்டு

2018-02-13@ 14:40:39

ஜமைக்கா : இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய ரசிகர் ஒருவர் இனவெறியுடன் நடந்து கொண்டதாக தென் ஆப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் புகார் அளித்துள்ளார்.ஜோகன்ஸ்பர்க் நகரில் 4வது ஒரு நாள் போட்டி விளையாடாத சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கேல்லரியில் அமர்ந்திருந்தார்.

இதனை செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மேனேஜர் முஹமத் மூசாஜி உறுதிப்படுத்தினார்.  இது குறித்து முஹமத் மூசாஜி கூறுகையில், ' உடை மாற்றும் அறையை கடந்து சென்ற போது, நிறைவெறியுடன் கூடிய தகாத வார்த்தைகள் தாஹீரின் காதில் விழுந்தன. ஆனால் திட்டிய நபரை சரியாக அடையாளம் காண முடியாமல் தாஹீர் விவாதம் செய்தார் . மேலும் இது குறித்து உடனடியாக மைதானப் பாதுகாப்பு வீரர்களிடமும் புகார் கூறினார். அவர்கள் தாஹீரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர்' இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அடையாளம் தெரியாத ரசிகர்களுடன் இம்ரான் தாஹீர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.அப்போது இம்ரான் தாஹீரை மைதானப் பாதுகாப்பு காவலர்கள் சமாதானம் செய்து அழைத்து செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.இந்நிலையில் மைதானத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகமும் ஜோகன்ஸ்பர்க் மைதான அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • franvve_heavyrain

    பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை : வெள்ளப் பெருக்கில் 13 பேர் உயிரிழப்பு

  • 16-10-2018

    16-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்