முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: போக்குவரத்துக்கழக சீரமைப்பு தொடர்பான ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு
2018-02-13@ 14:36:31

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து கழங்களை சீரமைப்பது பற்றி டி.ஆர்.பாலு குழு ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தது. ஆய்வு அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த மாதம் திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு நடத்திட தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்பித்தது.
முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், போக்குவரத்து கழகத்தை எப்படி சீரமைப்பது குறித்து ஆராய திமுக சார்பில் குழு அமைப்பட்ட குழு 27 பரிந்துரை வழங்கியுள்ளது. இதன்படி செயல்பட்டால், மக்கள் தலையில் பஸ் கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
இந்த அறிக்கையின்படி, போக்குவரத்து கழகத்தை மக்களின் சேவையாக கருதி நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும் என்றும் டீசல் மீதான கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ஒரே சீரான 10 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டும். டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நல்லிணக்க கூட்டம் நடத்த வேண்டும். பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்; தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை காக்னிசென்ட் விரிவாக்க பணிகளுக்காக ரூ.25 கோடி லஞ்சம் பெற்ற தமிழக அரசின் முக்கிய புள்ளி யார்?
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடப்போவதாக பரவியது வதந்தி; யாரும் நம்ப வேண்டாம் என அதிகாரிகள் விளக்கம்
தாம்பரம் அருகே ஓடும் பேருந்து பற்றி எரிந்தது; ஓட்டுநரின் துரித செயலால் 32 பேர் உயிர் தப்பினர்
நண்பனை காப்பாற்ற முயன்றபோது ரயில் மோதி பெயின்டர் பலி
சிமென்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடக்கம் : பொறியாளர் சங்கம் குற்றச்சாட்டு
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி