SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடா அருவியில் மூழ்கி இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு : உடலை பைக்கில் சென்னைக்கு கொண்டுவர நண்பர்கள் முயற்சி

2018-02-13@ 13:02:51

சென்னை: அருவி நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் உடலை பைக்கில் வைத்து சென்னைக்கு கொண்டு வர முயன்ற நண்பர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையில் மூலக்கடை மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தடா அருவிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது யஷ்வந்த் என்ற பொறியியல் மாணவர் ஆழமான பகுதியில் சிக்கி தத்தளித்தார்.

அவரை காப்பாத்த சென்ற மனிஷா என்பவரும் நீரில் மூழ்கினார். இதைக் கண்ட மற்ற மூவரும் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். இதனால் செய்வதறியாது அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உடல்களை மோட்டார் சைக்கிள்களில் வைத்து சென்னையை நோக்கி கொண்டு வந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இளைஞர்களை பிடித்து உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நண்பர்கள் உயிரிழந்த பதற்றத்தில் செய்வதறியாது உடல்களை சென்னை கொண்டு செல்ல அவர்கள் முயன்றது போலீசில் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்