SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

20 ஆண்டுகளுக்கு பிறகு கோடிக்கணக்கில் நஷ்டம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அறிவிப்பு

2018-02-13@ 11:39:50

மும்பை: நாட்டின் முக்கிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு ரூ.155 கோடி இழப்பை எஸ்பிஐ வங்கி சந்தித்து இருந்தது. அதன் பிறகு சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக இழப்பை சந்திக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3 ஆம் காலாண்டில் ரூ.2416 கோடி அளவு இழப்பை எஸ்பிஐ சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வங்கியின் வாராக்கடன் ரூ.23,000 கோடியாக அதிகரித்ததுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்பிஐ  அதிகாரி கூறுகையில், ஏறக்குறைய ரூ.25,830 கோடி கடன்கள் வாரா கடனாக மாறிவிட்டது. அடுத்து வரும் காலாண்டுகளில் வாராக்கடன் அளவை குறைக்க சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடன் கொடுத்தவர்களின் கடனை திருப்பி வசூலிப்பதில் கடுமையான நிலைப்பாட்டை எஸ்பிஐ எடுத்து வருவதாக அவர் கூறினார். பெரு நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்