SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-02-13@ 10:06:33

விசாலமான நெற்றிகளைக் கொண்ட பெண்கள் பெரிய பொட்டு வைத்துக் கொண்டால் நெற்றியின் அகலம் குறைந்தது போல் அழகாகத் தெரியும். அகலம் குறைந்த நெற்றியுள்ளவர்கள் இரண்டு புருவங்களுக்கு இடையில் சிறிய பொட்டு வைத்தால் எடுப்பாக இருக்கும். சதுரமான, வட்ட முக வடிவம் உள்ளவர்கள் சற்று பெரிய, வட்டவடிவமான பொட்டுக்களை வைக்கலாம்.

நெற்றியில் ஒரே இடத்தில் பொட்டுவைத்தால் அந்த இடத்தில் தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். எனவே பொட்டுக்களை சற்று இடம்மாற்றி வைப்பது நல்லது.

நெட்டிலிங்கமரம் இலைகளின் அழகுக்காகவே விரும்பி வளர்க்கப்படுகின்றன. அடர்த்தியாக கிளைகளைப் பரப்பி வளராமல், விண்நோக்கியே இதன் வளர்ச்சி இருப்பதால் பெரும்பாலும் பாதையோரங்களில் வேலி போன்று இவை வளர்க்கப்படுகின்றன.

கடந்ததலைமுறையினர் புராணக்கதைகளில் ஏழுகடல்தாண்டி என்ற பதத்தை கட்டாயம் கேட்டிருப்பர். பூமத்தியரேகையை மையமாக வைத்து முப்பெருங்கடல்களும் வடக்கு,தெற்கு என ஆறாகவும், அவற்றோடு ஆர்டிக்கையும் சேர்த்து ஏழுகடல்களாகவும் பிரிக்கப்படுகின்றன. இதோ இவை: வடபசிபிக்,தென்பசிபிக், வடஅட்லாண்டிக், தென்அட்லாண்டிக், வடஇந்துமாக்கடல், தென்இந்துமாக்கடல் மற்றும் 7வதாக ஆர்டிக்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்