SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடும் போட்டி

2018-02-13@ 00:30:19

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சுனில் செத்ரி தலைமையிலான பெங்களூரு எப்சி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதுவரை 15 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 11 வெற்றியுடன் 33 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகிப்பதுடன், பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்துகொண்டது. மொத்தம் 90 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இதுவரை தகுதி சுற்றில் மட்டும் 71 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த 3 வாரங்களில்தான் உச்சக்கட்ட போட்டிகள் திருப்புமுனையாக நடைபெற உள்ளன.

இதில், யார் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெங்களூரு அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும்… புனே, ஜாம்ஷெட்பூர், சென்னை, கேரளா அணிகளும் கோப்பையை முத்தமிட வரிந்துகட்டுகின்றன.  மும்பை, கோவா அணிகளும் கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்து நடைபெறும் அனைத்து போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதனால் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் கால்பந்து ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்