SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலா படத்தின் சண்டை காட்சி லீக்

2018-02-13@ 00:29:46

சென்னை: ரஜினியின் காலா பட சண்டை காட்சி இணையதளத்தில் வெளியானது. ரஜினி  நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள படம் காலா. இந்த படத்தை ரஜினியின்  மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 27ம் தேதி  திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் கிளைமாக்சில் வரும்  சண்டைக்காட்சியின் சில பகுதிகள் மட்டும் இணையதளத்தில் வௌியானது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்தது. வௌியான வீடியோவில் வில்லனின்  ஆடியாள், இரும்பு ராடுடன் ரஜினியை தாக்க வருவது போலவும் அந்த நபரை  ரஜினி எட்டி உதைப்பது போலவும் காட்சி உள்ளது.

பட காட்சிகள்  அல்லது படத்தின் பாடல்கள் ரிலீசுக்கு முன்பே நெட்டில் வௌியாவது அவ்வப்போது நடக்கிறது. ரஜினியின் சிவாஜி, கபாலி மற்றும் பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு  இதேபோன்ற நிலை ஏற்பட்டது. படத்தின் எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிக் உள்ளிட்ட  பணிகளில் ஈடுபடும்போது யாராவது இதுபோல் காட்சி களை வெளியிடுவது நடக்கிறது. அதே சமயம் பெரிய படங்களின் விளம்பரத்துக்காக இதுபோல் சில நொடிகள் ஓடும் காட்சியை படத்தின் தரப்பிலிருந்தே வௌியிடுவதாகவும் ஒரு பேச்சு உள்ளது.  தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saaambal_cat11

    சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X