SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மியாட் மருத்துவமனை நிறுவனர் தின விழா

2018-02-13@ 00:28:57

ஆலந்தூர்: சென்னை அடுத்த பனப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் 19வது நிறுவனர் தினவிழா, மருத்துவமனை அரங்கில் நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் தலைமை வகித்தார். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரீத்திவ் மோகன்தாஸ் தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது, மருத்துவமனையின் 19 ஆண்டு கால சாதனைகள், இதய சிகிச்சை, மூட்டு மாற்ற சிகிச்சை, அறுவை சிகிச்சை நவீன கருவிகள், நவீன கருவிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மேற்கு வங்க முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன், பிஎஸ்சி லைப் நிர்வாக இயக்குனர் மலாக்கி  நயாகா ஆகியோர்  கலந்து கொண்டு மருத்துவமனையை பாராட்டி பேசினர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ், சால்வை மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து கவுரவித்தார். பின்னர், மருத்துவமனை நிறுவனர் மோகன்தாஸ் கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து, 19 ஆண்டுகள் சேவை புரிந்த டாக்டர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட 9 பேருக்கு நினைவு விருது வழங்கப்பட்டது. முன்னதாக மருத்துவமனை சேவைகள், சிகிச்சைகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. மேலும், சிஜி தீவில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட மியாட் மருத்துவமனை குறித்து, விளக்கி பேசப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முன்னாள் கவர்னரின் மனைவி பத்மினி நாராயணன், மியாட் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பர்ரி ரொசாரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்