SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெ., பிறந்தநாள் பரிசு பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது விசாரணை தொடரும் ; உச்சநீதிமன்றம்

2018-02-13@ 00:26:39

ஜெயலலிதா கடந்த 1992ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது, அவரது பிறந்த நாளில் ரூ.2 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் அவருக்கு கொடுக்கப்பட்டது. அரசு சட்ட விதிப்படி மாநிலத்தின் முதல்வாராக இருக்கும் ஒருவர் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் தான் சேர்க்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா அவருக்கு வந்த காசோலை மற்றும் டிடிக்கள் அனைத்தையும் அவரது சொந்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதா உட்பட அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சிபிஐ தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால், அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும், ஆனால், செங்கோட்டையன் மீதான வழக்கை நீதிமன்ற விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாக தெரிவித்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவில்,” வழக்கில் இருவர் இறந்து விட்டதால் அவர்களை இதிலிருந்து நீக்கி ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் செங்கோட்டையன் மீது சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை கண்டிப்பாக தொடரும். இதில் குறிப்பாக வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து மேற்கண்ட மனு மீதான விசாரணை மேற்கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒருவேளை செங்கோட்டையனுக்கு பாதகமாக முடிந்தால் அவரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என தெரியவருகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்