SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த விவகாரம் : சரணடைந்த ஓட்டல் உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலம்

2018-02-13@ 00:25:30

சென்னை: தீபாவிடம் அதிகம் பணம் இருப்பதால் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பணத்தை பறிமுதல் செய்யும்படியும், எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் மாதவன் கூறியதால் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்த ஓட்டல் உரிமையாளர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார். அவரது பேரவையில் பதவி கொடுப்பதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, ஜெ.தீபா மற்றும் அவரது கார் டிரைவர் ராஜா மீது ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தி.நகர் சிவஞானம் சாலையில் உள்ள ஜெ.தீபா வீட்டிற்கு கடந்த சனிக்கிழமை காலை 6 மணியளவில் மித்தேஷ் குமார் என்பவர் வந்தார். அப்போது, ஜெ.தீபா வீட்டின் பாதுகாவலர்களிடம் தான் வருமான வரித்துறையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். தான் சோதனை நடத்த வந்ததாக கூறி ஒரு ஆவணத்தை காட்டினார். அப்போது, அங்கிருந்தவர்கள் நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்கள். மற்றவர்கள் எங்கே எனக் கேட்டனர். அப்போது, அந்த நபர் காலை 10 மணிக்கு மேல் மற்ற அதிகாரிகள் வந்த உடன் சோதனை துவங்கும் என்று கூறினார்.

அப்போது, தீபா கணவர் மாதவன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த நபரை, தீபா கணவர் மாதவன் உள்ளே அனுமதித்து உட்கார வைத்தார். அதை தொடர்ந்து, அங்கு வந்த தீபாவின் வழக்கறிஞர்கள் அந்த நபரிடம் உங்களது அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டனர். அதை தொடர்ந்து அந்த நபர் தான் கையில் இருந்த அடையாள அட்டையை அங்கிருந்தவர்களிடம் காட்டினார்.

தொடர்ந்து அந்த நபர், ஜெ. தீபா பேரவையில் பலரிடம் பதவி தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று பல கோடி ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்கு புகார் வந்தது. அதன்படி சோதனை நடத்த வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். தீபாவுக்கும் போன் செய்து, உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். 15 நிமிடத்தில் வரவேண்டும் என்றும் எச்சரித்தார்.

இதற்கிடையே ஜெ. தீபா வீட்டிற்கு உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் வந்தனர். அப்போது, போலீசாரிடம் அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்துள்ளார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரது அடையாள அட்டையை காட்டுமாறு கூறினர். அப்போது, அந்த நபரின் அடையாள அட்டையை உதவி கமிஷனர் வாங்கி பார்த்து கொண்டிருக்கும் போது, திடீரென அந்த நபர் ஜெ. தீபா வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதை பார்த்த போலீசார் அந்த நபரை விரட்டி பிடிக்க முயன்றும் கோட்டைவிட்டனர்.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்த வாலிபரை பிடிக்க தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஜெ.தீபாவின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமான வகையில் திருப்பி வைக்கப்பப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் மீது சந்தேகம் எழுந்தது. மாதவன் செல்போன் அழைப்புகளை ரகசியமாக தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மாதவன் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த நபரிடம் பேசியது உறுதி செய்யப்பட்டது.

உடனே தனிப்படை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்த நபர் விழுப்புரத்தை சேர்ந்த பிரபாகரன் என தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் விழுப்புரம் ெசன்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் பிரபாகரன் இல்லை. உடனே தனிப்படை போலீசார் வீட்டில் இருந்த பெற்ேறார் மற்றும சகோதரியை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கேள்விப்பட்ட பிரபாகரன், மாம்பலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தனது வழக்கறிஞருடன் சரணடைந்தார்.

பின்னர் பிரபாகரன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

எனது சொந்த ஊர் விழுப்புரம். எம்பிஏ பட்டதாரி. கல்லூரி படிப்பை தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் படித்தேன். மேல் படிப்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்தேன். நான் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறேன். கடந்த 4 மாதங்களுக்கு முன் எங்கள் ஓட்டலுக்கு மாதவன் சாப்பிட வந்தார். அப்போது மாதவன் என்னை பார்த்து நீங்கள் நல்ல வாட்ட சாட்டமாக இருக்கிறீர்கள் என்று கூறினார். ஏதாவது படத்தில் நடிக்கிறீர்களா என்றும் கேட்டார். அதற்கு நான் இல்லை என்று கூறினேன். உடனே மாதவன் படத்தில் நடிக்க கூப்பிட்டார். பின்னர் 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் மாதவன் என் ஓட்டலுக்கு வந்தார். அப்போது என்னுடைய புகைப்படத்தை கேட்டு வாங்கி கொண்டார்.

பின்னர் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார். அப்போது மாதவன், ஒரு கூரியர் அனுப்புகிறேன். அதில் வருமான வரித்துறை அதிகாரிக்கான அடையாள அட்டை இருக்கும். நீ, வருமான வரித்துறை அதிகாரி போல் நடிக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி 15 நாட்கள் கழித்து மாதவன் ஒரு கூரியர் அனுப்பினார். அதில் நான் வருமான வரித்துறையில் அதிகாரி போன்று இருக்கும் அடையாள அட்டை இருந்தது.

மீண்டும் எனக்கு மாதவன் வாட்ஸ் அப் மூலம் போன் செய்து கடந்த 10ம் தேதி காலை தி.நகர் சிவஞானம் சாலையில் உள்ள வீட்டிற்கு வர சொன்னார். திட்டமிட்டப்படி நான் கடந்த சனிக்கிழமை காலை மாதவன் வீட்டிற்கு சென்றேன். அப்போது மாதவன் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு என்னிடம், ஜெ.தீபா வீட்டில் இல்லை. நான் வீட்டில் தான் இருக்கிறேன். நீ பயப்படாமல் வருமான வரித்துறை அதிகாரி போல் உள்ேள வா.... நான் பார்த்து கொள்கிறேன். சோதனை என்ற பெயரில் தீபா அறையில் உள்ள பணம் மற்றும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

சம்பவ இடத்தில் மாதவன் இருப்பதால் நான் வருமான வரித்துறை அதிகாரி போல் ஜெ.தீபா வீட்டிற்கு வந்தேன். ஏற்கனவே முடிவு செய்தது போல் உள்ளே நுழைந்தேன். அப்போது பாதுகாவலர்கள் என்னை ஒரு வித சந்தேகத்துடன் தடுத்தனர். அப்போது மாதவன் வெளியே வந்து என்னை வீட்டிற்குள் அழைத்து சென்று சோதனையில் எடுக்க வேண்டியது குறித்து கூறி கொண்டிருந்தார். நான் உள்ளே வரும்போது ஒரு கார் வெளியில் சென்றது. அது தீபாவாக இருக்கலாம் என்று நினைத்தேன். அப்போது மாதவன், மனைவி ஜெ.தீபாவை செல்போனில் அழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். பணம், சொத்து ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்கிறார். நீ சீக்கிரம் வா. அதேநேரத்தில், அவர்களுக்கு பணம் கொடுத்து சரிசெய்து கொள்ளலாம் என்று கூறினார். உடனே ஜெ.தீபாவின் வழக்கறிஞர், செய்தியாளர்களுடன் வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் போலீசாரும் வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான், மாதவனிடம் எப்படி வெளியே செல்வது என்று கூறி புலம்பினேன். உடனே மாதவன் செய்தியாளர்கள் மற்றும் போலீசாரை நான் பார்த்து கொள்கிறேன். நீ வீட்டின் சுவர் ஓரம் ஒரு நாற்காலி உள்ளது. அதில் ஏறி குதித்து தப்பி ஓடிவிடு மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினார். அவர் கொடுத்த திட்டப்படி நான் வெளியே வந்தேன். என் பின்னால் அவரும் வந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு நான் அங்கிருந்து தப்பி ஓடினேன்.

வெளியே வந்தபோது ஒரு ஆட்டோ சென்றது. அதில் ஏறி, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் சென்றேன். அங்கிருந்து நங்கநல்லூர் சென்றேன். அங்கு, ஒரு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டேன். அதன்பின் தாம்பரத்தில் பஸ்சைப் பிடித்து, விழுப்புரம் சென்றேன். மாதவன் கூறியதால் தான் நான் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்தேன். மற்றபடி எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு சரணடைந்த பிரபாகரன் வாக்கு மூலம் அளித்ததாக ேபாலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜெ.தீபா வீட்டில் 8 மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக ஜெ.தீபாவே மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதுகுறித்து விசாரணை நடத்திய போது ஜெ.தீபா கார் டிரைவர் ராஜா அரசியல் விளம்பரத்திற்காக கற்களை வீசிவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. அதேபோன்று மாதவன் தனது மனைவியிடம் உள்ள பணத்தை அபகரிக்க “குரு சிஷ்யன்” திரைப்பட பாணியில் பணத்தை அபகரிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு முத்திரையுடன் போலி ஐடி கார்டை  தயாரித்த நபருக்கு போலீஸ் வலை?
ஜெ.தீபா அறையில் இருந்து பணம் மற்றும் முக்கிய ஆணவங்களை பறிமுதல் செய்ய மாதவன் திட்டமிட்டார். அதன்படி ஒரு மாதத்திற்கு முன்பே பிரபாகரன் புகைப்படத்தை ைவத்து வருமான வரித்துறை அதிகாரி போன்று அரசு முத்திரை மற்றும் வருமான வரித்துறை இயக்குநர் கையெழுத்து போட்டு போலி ஐடி கார்டு மற்றும் சோதனைக்கான அனுமதி கடிதத்தை மாதவன் தயாரித்துள்ளார். எனவே இந்த மோசடிக்கு பின்னணியில் பலர் உள்ளதாக போலீசார் கருதுகின்றனர். இதனால் போலி ஐடி கார்டை தயாரித்த நபர்கள் யார் என்பவது குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X