SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 பெண்களை திருமணம் செய்து மோசடி

2013-01-18@ 01:37:05

நாகர்கோவில் : பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்து விட்டார் என்று குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர் மீது, அவரது மனைவி புகார் கூறி உள்ளார். குமரி மாவட்டம் மணலிக்கரையை அடுத்த முகிலன்கரை, எல்லாமாவிளையைச் சேர்ந்தவர் அனிதா பால்நேசன்(36). இவர் நேற்று குமரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார். அந்த புகார் மனு காப்பியை நிருபர்களிடமும் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கும், திரைப்பட இயக்குனர் ரவி தம்பி என்ற ஜெஸ்டன் ரவி(55) என்பவருக்கும் 1999 ஜனவரி 21ம் தேதி குமரி மாவட்டம் வேர்கிளம்பி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவுத் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது எங்கள் குழந்தை சங்கீதா(12) 7ம் வகுப்பு படிக்கிறாள். என்னை திருமணம் செய்வதற்கு முன்பாக,  குமரி மாவட்டம் ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏற்கனவே ரவி தம்பி திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தை மறைத்தே என்னை 2,வதாக திருமணம் செய்து மோசடி செய்து விட்டார்.

இதேபோல் திருவனந்தபுரம் கொட்டக்கரை என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 3,வதாகவும், திருவனந்தபுரம் பூஜப்புரையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை 4,வதாகவும் திருமணம் செய்து இருக்கிறார். 5,வதாக குமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.  தற்போது 6,வதாக சென்னை மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். இது மட்டுமின்றி எனது கணவர் மீது இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி செய்து விட்டார் என்ற வழக்கும் தக்கலை காவல் நிலையத்தில் உள்ளது.

 எனது கணவர் ரவி தம்பி பனியில் பூத்த பூக்கள், ரிக்ஷா தம்பி மற்றும் சமீபத்தில் வெளியான வாச்சாத்தி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது மாமன் மனசிலே என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். திருமணம் என்ற பெயரில் என்னை ஏமாற்றி மோசடி செய்த இயக்குனர் ரவி தம்பி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருமணத்தின் போது நாங்கள் கொடுத்த நகை, பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,  எஸ்.பியை சந்தித்து எனது கணவர் மீது புகார் மனு அளிக்க வந்தேன். எஸ்.பி. இல்லாததால், தபால் மூலம் புகாரை அனுப்புவேன் என்றார்.

பணத்துக்காக பொய் புகார்

இந்த புகார் குறித்து வாச்சாத்தி பட இயக்குனர் ரவி தம்பியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: அனிதா பால்நேசன் எனது உறவினர் மகள். நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஒரு மகள் இருக்கிறாள். குடும்பத்தின் மீது நான் பாசமாக தான் உள்ளேன். கணவன், மனைவிக்கு இடையே சாதாரணமாக ஏற்படக்கூடிய பிரச்னையை பெரிதாக்கி விட்டனர். அனிதாவின் சில நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை.

குறிப்பாக அவர் எனக்கு தெரியாமல் வெளிநாடு சென்று வந்தார். நான் இதை கண்டித்தேன். 5 வருடங்கள் வரை வெளிநாட்டில் இருந்தார். திரும்பி வந்ததும் பண கஷ்டம் என்றார். அவர் நடத்தி வரும் டெய்லர் கடைக்கு நான்தான் ஏற்பாடு செய்தேன். எனது மகள் சங்கீதாவுக்கு செய்ய வேண்டியதை கண்டிப்பாக நான் செய்வேன். எனக்கு வேறு எந்த பெண்ணுடனும் தொடர்பு கிடையாது. என்னிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது புகார் அளிக்கிறார்கள். இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
drug coupon card prescription coupons drug discount coupons
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்