SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘கொலவெறிடி’க்கு என்ன அர்த்தம்?

2012-02-24@ 01:30:17

பாட்னா : ‘கொலவெறிடி’க்கு என்ன அர்த்தம்?’ என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆர்வமாக கேட்டறிந்தார். நடிகர் தனுஷ் பாடியுள்ள ‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்கு இந்த பாடலை காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நேற்று முன்தினம் மதிய உணவு இடைவெளியின்போது பத்திரிகையாளர் சிலர் சென்று சந்தித்தனர். அப்போது, ஜாலி மூடில் இருந்த நிதிஷ், சினிமா பாடல்கள் பற்றி ஆர்வமாக பேசினார்.

‘சல்மான் கான் நடித்துள்ள ‘தபாங்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘முன்னி பத்னம் ஹய்’ பாட்டு நன்றாக இருக்கிறது. அதேபோல், கொலவெறிடி பாட்டையும் கேட்டேன்’’ என்று கூறியவர், அருகில் நின்றிருந்த தனது உதவியாளரை திடீரென பார்த்து, ‘ஆமா... கொலவெறிடி என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டார். அதற்கு உதவியாளர், ‘அது தமிழ் வார்த்தை. அதற்கு, கொலை செய்யக் கூடிய அளவுக்கு வெறி என்று அர்த்தம்’ என்று விளக்கினார். அதை கேட்ட நிதிஷ், ‘ஓஹோ... அப்படியா!’ என்றார்.

உடனே அருகில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர், ‘காதலில் தோல்வி அடைந்த ஒருவன், இந்த பாட்டை பாடுகிறான். என்னை ஏன் இவ்வளவு சித்ரவதை செய்கிறாய்’ என்ற காதலியிடம் கேட்பதுபோல் அவன் பாடுகிறான்’ என்று விரிவாக விளக்கம் கொடுத்தார்.

how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்