SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலமேடு ஜல்லிக்கட்டு அமர்க்களம் களத்தில் சீறிய காளைகள்: அடக்கிய வீரர்கள

2013-01-16@ 00:30:05

மதுரை, : மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று மகாலிங்கசாமி மடத்துக் கமிட்டியின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிகட்டு நடைபெற்றது. கால்நடை மருத்துவத் துறை சார்பில் 80 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர், விலங்கின நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு நிரந்தர பதிவு எண்ணைக் கொண்ட காளைகளிடம் ஊக்கமருந்து உள்ளிட்ட பரிசோதனை செய்தனர். இதில் 37 காளைகள் தகுதியற்றதாக வெளியேற்றப்பட்டது. பின்னர் 365 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.
இதேபோல் 377 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களை மருத்துவத்துறை மண்டல உதவி இயக்குநர் செந்தில்குமார் தலைமையிலான 100க்கும் அதிகமான மருத்துவ குழுவினர் உடல் தகுதி மற்றும் ஊக்கமருந்து சோதனை களை செய்தனர். இதில் 56 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அடையாள அட்டையுடன் 21 முதல் 40 வயதுக்குட்ட 321 பேர் சீருடையுன் அனுமதிக்கப்பட்டனர்.
வாடிவாசலில் இருந்து 100 மீ தொலைவிற்கு தேங்காய் நார் போடப்பட்டு மாடுபிடிக்கும் பகுதி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. முதலில் காலை 8.45 மணிக்கு கிராமத்தின் சார்பில் 6 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.  
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களை திணறடித்தது. துள்ளி விளையாடிய பல காளைகளை இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர். யாரிடமும் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக் கும், காளைகளை மடக்கிய வீரர்களுக்கும் தங்ககாசு, வாஷிங்மெஷின், சைக்கிள், பீரோ, கிரைண்டர், மிக்சி, பேன், அண்டா, மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பாலமேடு ஜல்லிகட்டில் காளைகளை அடக்கியதில் மாடுபிடி வீரர்கள் 7 பேரும், காளை உரிமையாளர்கள் 8 பேரும், பார்வையாளர்கள் 5 பேருடன் பாதுகாப்பு பணியிலிருந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராமசந்திரன்(30) என்ற போலீசார் ஆகிய 21 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 5  பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மதியம் 2 மணிக்கு போட்டிகள் நிறுத்தப்பட்டது. 200 க்கும் அதிகமான காளைகள் பங்கேற்க முடியாமல் போனது. டிஆர்ஓ ரவீந்திரன், கூடுதல் கலெக்டர் அருண்சுந்தர்தயாள் ஆகியோர் பார்வையிட்டனர். விலங்கின நல வாரிய பார்வையாளர்களும் போட்டிகளை கண்காணித்தனர்.
தமிழ் சினிமா இயக்குநர் சிம்புதேவனின் காளை சிறிது நேரம் நின்று விளையாடியதுடன் யாரிடமும் பிடிபடாமல் பரிசினை பெற்றது. இதேபோல் பாலமேடு வடக்குத்தெரு சோனை என்பவரது மாடு போட்டியில் அதிக நேரம் களத்தில் நின்றது. வீரர்களுக்கு விளையாட்டு காட்டியதுடன் 8 முறை தான் வந்த வாடிவாசலுக்குள் சென்று திரும்பியது, இதனால் யாரிடமும் பிடிபடவில்லை.
அவனியாபுரம்: பொங்கலன்று மதுரை, அவனியாபுரத்தில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 314 காளைகள் சீறிப்பாய்ந்து கதி கலக்கின. அவற்றை அடக்க 294 பேர் களமிறங்கினர். இதில் 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
திருவெறும்பூர்: திருச்சி பெரியசூரியூரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி,நேற்று காலை 10 மணிக்கு கலெக்டர் ஜெயஸ்ரீ ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்தார். இதில் 351 காளைகள் பங்கேற்றன. 150 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாடு முட்டியதில் 60 பேர் காயமடைந்தனர். 9 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


போக்கு காட்டிய காளைகள்
காளைகளை அடக்க 321 பேரில் 200 க்கும் மேற்பட்டவர்கள் களத்தில் பார்வையாளர்களைப் போலவே நின்றிருந்தனர். மீதமுள்ள குறைவானவர்களே பங்கெடுத்ததில் வீரர்களைவிட காளைகளே அதிகமாய் போக்கு காட்டி தங்களின் உரிமையாளர்களுக்கு பரிசினையும் பெற்றுத் தந்தன. இதனிடையே உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லு£ர் ஜல்லிகட்டு இன்று நடைபெறுகிறது.

sms spy app read spy apps free
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்