SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிஎச்,ல் பிப். 2ம் தேதி விஸ்வரூபம் வெளியீடு : கமல் அறிவிப்ப

2013-01-15@ 13:02:58

சென்னை: விஸ்வரூபம் படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி டிடிஹெச்சில் வெளியிடப்படும் என்று கூறி உள்ளார் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் படம் கடந்த 10ம் தேதி டிடிஹெச்சில் வெளியிடப்படும் மறுநாள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று கமல் அறிவித்தார். இதற்கு திரை அரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டிடிஹெச்சில் முதலில் வெளியிட்டால் விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் அறிவித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் வரும் 25ம் தேதி தியேட்டர்களில் மட்டும் ‘விஸ்வரூபம் வெளியிடப்பட்டும் என்று கமல் அறிவித்தார். டிடிஹெச்சில் ஒளிப்பரப்புவது எப்போது என்பது பற்றி இன்று கமல் அறிவித்தார். அதன்படி பிப்ரவரி 2ம் தேதி டிடிஹெச்சில் இப்படம் ஒளிபரப்பாகிறது. இதுபற்றி கமல் தனது அறிக்கையில், ‘விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்களின் அச்சம் போக¢க டிடிஹெச் வெளியீட்டு தேதியை சற்றே நகர்த்தி இருக்கிறேன். அதன்படி விஸ்வரூபம் படம் பிப்ரவரி 2ம் தேதி டிவியில் ஒளிபரப்பாகும். தமிழ், தெலுங்கு டிடிஎச் காட்சிகளுக்கான கட்டணம் வெகுவாய் குறைக்கப் படும். ஏற்கனவே பணம் கட்டியவர்கள் அதை முழுவதுமாக திருப்பப்பெறவோ, புதிய தேதியில் காட்டப்படும் காட்சியின் கட்டணம் போக பாக்கியை திருப்பப்பெறவோ செய்யலாம். இந்தி விஸ்வரூபம் பிப்ரவரி 1ம் தேதி ஒளிபரப்பாகும். தமிழ், தெலுங்கு மொழியில் பிப்ரவரி 2ம் தேதி டிடிஹெச்சில் விஸ்வரூபம் காண்பிக்கப்படும் என்றார்.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
sinemet go sinemet
abortion pill procedures late term abortion pill having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2020

    20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2020

    19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-01-2020

    18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-01-2020

    17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Madurai Avaniyapuram Jallikattu

    15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்