SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபத்து வாய்ப்பு உள்ளவற்றுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் : மருத்துவ கருவிகளுக்கு காலாவதி அதிகபட்சம் ஐந்தாண்டுகள்

2018-01-21@ 00:14:45

நாகர்கோவில்: மருத்துவ உபகரணங்களுக்கு காலாவதி அதிகபட்சம் ஐந்தாண்டுகள் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகில் அதிக அளவில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உடலுக்குள் செலுத்தும் மருத்துவக் கருவிகள் (in-vitro medical devices), மூல உயிரணுக்கள், ஊக்குவிப்பு மருந்துகள், மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆய்வு உள்ளிட்டவற்றுக்கு பயன்படும் மருத்துவப் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் திறனை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்கு வழிமுறைகள், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்-1940-ல் இடம்பெற்றுள்ளன.

பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதில் மருந்துத் துறையின் பங்களிப்பை கவனத்தில் கொண்டு, மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை, பணிகளை மேற்கொண்டது. ஏற்கனவே உள்ள சட்டத்தின்கீழ், மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தனி விதிகள் உருவாக்கப்பட்டன. மருத்துவ உபகரணங்கள், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காக தனியாக சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டது. மேலும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (சட்டத்திருத்த)  மசோதா-2013 திரும்பப் பெறப்பட்டது.

 கடந்த 14 மாதங்களுக்கு முன்னர் தயார் செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் சட்ட வரைவு தற்போது சட்டமாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த டிரக் மற்றும் காஸ்மெட்டிக் சட்டத்தின் அடிப்படையில் 15  வகையான மருத்துவ உபகரணங்கள் மட்டுமே இதன் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால்  மருத்துவ உபகரணங்களுக்கான விலை கட்டுப்பாட்டில் இல்லாத வகையில் இருந்தது.  அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாக உருவாக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள்  பரிசோதனை அடிப்படையில் உள்ள 247ம், பயன்பாட்டிற்கு உகந்த 351ம் என மொத்தம் 598 உபகரணங்கள் தற்போது புதிய சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதய வால்வுகள், ஸ்டென்ஸ்கள் மற்றும்  கர்ப்ப தடை சாதனங்கள் வரை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது ஆகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைக்கேற்ப இந்த உபகரணங்கள் பட்டியல்  புதுப்பிக்கப்படும். புதிய சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* மருத்துவ உபகரணங்கள் உருவாக்கப்பட்ட நாள் முதல் அதிகபட்சம் ஐந்தாண்டுகள் மட்டுமே அதன் சுய காலாவதி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேலும் காலாவதி உள்ள மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு இருப்பின் அதனை சம்பந்தப்பட்டவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

* 90 நாட்கள் காலாவதி கொண்ட உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுமாயின் அதன் இறக்குமதி வேளையில் குறைந்தபட்சம் 40 சதவீதம் கால அளவு மீதம் இருக்க வேண்டும். 90 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை காலாவதி உள்ள மருத்துவ உபகரணங்களுக்கு இறக்குமதி வேளையில் 50 சதவீதத்திற்கும் மேல கால அளவு மீதமிருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் உள்ள உபகரணங்களுக்கான கால அளவு இறக்குமதி வேளையில் 60 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
 
* மருத்துவ உபகரணத்தின் பேக்கிங் மீது உபகரணத்தின் பெயர், உபயோகிப்பாளர் அறிந்து கொள்ளும் வகையிலான விபரங்கள், தயாரிப்பாளர் முகவரி விபரங்கள், சரியான எடை, அளவு, காலாவதி தேதி, அதிகபட்ச விலை ஆகியனவும் இடம்பெற வேண்டும்.

* உபகரணங்கள் பரிசோதனை அடிப்படையிலானது மற்றும் பயன்பாட்டிற்குள்ளது என்பதையும் பிரித்து காண்பிக்க வேண்டும். பரிசோதனைக்கானது, பயன்பாட்டிற்கானது என்பதில் விபத்துகள் ஏற்படும் நிலையில் உள்ளவை என்ற அடிப்படையில் மொத்தம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்களால் குறைவான விபத்துகள் அல்லது விபத்துகள் ஏற்படாது என்ற நிலையில் உள்ளவைக்கு மாநில அளவிலான தயாரிப்பு அனுமதி வழங்கப்படும். கூடுதலாகவும், அதிக அளவில் விபத்துகள் நிகழ்கின்ற சாத்தியக்கூறு உள்ள மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கும்.

* மருத்துவ உபகரணங்களின் இறக்குமதி அனுமதி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. அனைத்து விதமான உபகரணங்கள் கொள்முதல், விற்பனை, கண்காட்சி போன்றவற்றுக்கான அனுமதியை அந்தந்த மாநில அரசு வழங்கலாம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்