SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காட்டுப்பன்றி தொல்லையால் விவசாயிகள் வேதனை

2018-01-21@ 00:14:29

கோவை: தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில், மலைப்பகுதியை ஒட்டியுள்ள வேளாண் பயிர்கள், காட்டுப்பன்றிகளால் நாசமடைந்து வருகிறது. தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், 9.16 லட்சம் ஏக்கர் விளைநிலம் காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.   கேரள மாநிலத்தில் இதுபோல் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட்டுத்தள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இதற்கான அனுமதியை தமிழக வனத்துறை வழங்கியது.

காட்டுப்பன்றிகள் வன உயிரின பாதுகாப்பு சட்டம் ஷெட்டியூல் 4 பிரிவின் கீழ் இருந்தது. இந்த சட்டத்தில் இருந்து காட்டு பன்றிகள் நீக்கப்பட்டு, சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டது.  ஆனால், வனத்துறையில் ஆள் பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் தள்ளிபோடப்பட்டது. இதுவரை ஒரு காட்டுப்பன்றிகூட கொல்லப்படவில்லை. தமிழக வனத்துறையினர் தங்களுடன் ஒத்துழைப்பது இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது: மாநில அளவில் நடந்த ஆய்வில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் விவசாய தோட்டங்களுக்குள் வந்து, பயிர்களை நாசம் செய்வதாக தெரியவந்துள்ளது.

ஒரு சராசரி விவசாயி சுமார் ரூ.3 லட்சம் செலவு செய்து, காய்கறி தோட்டம் அமைத்தால், மகசூல் எடுப்பதற்கு முன்பாகவே, அனைத்து பயிர்களையும் அழித்துவிட்டு செல்கிறது. தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதுபற்றி தமிழக வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘காட்டுப்பன்றிகள், வனத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு மீண்டும் வனத்துக்குள் சென்றுவிடுகிறது. இவற்றை, ஒட்டுமொத்தமாக கொல்வது இயலாத காரியமாக உள்ளது. இருப்பினும், இவற்றை கொல்ல மாஸ்டர் பிளான் தயாரித்துள்ளோம். கோவை உள்பட இதர மாவட்டங்களில் இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aalangatty_kanamalai11

  டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

 • northensnow

  பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • baloon_worstand

  ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

 • redmoon_lunar12

  சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்