SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுகாதார பணியிடங்களை நிரப்ப மேலும் 2 ஆண்டுகளாகும் : டெங்கு பலியில் தமிழகம் முதலிடம் : கடந்த ஆண்டு பாதிப்பு-23,035, பலி-63

2018-01-21@ 00:14:15

நாகர்கோவில்: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 23,035 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும், 63 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள் என்றும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்கள் 1 லட்சத்து 57,220 எனவும், டெங்கு காய்ச்சலால் பலியானவர்கள் எண்ணிக்கை 250 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவிலேயே டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் கேரளம் முதலிடமாக இருக்க, தமிழகம் 2ம் இடத்தை பெற்றிருந்தது. ஆனால் இதுவே பின்னர் எண்ணிக்கை உயர்ந்து கடந்த ஆண்டில் அதிகபட்ச டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிர் பலி என்ற அடிப்படையில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொசுக்களை முற்றிலுமாக ஒழிப்பது என்பது இயலாத காரியம் எனவும், கொசு உற்பத்தியை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளில் போதிய அளவில் சுகாதார பணியாளர்கள் இல்லை என்பது குற்றச்சாட்டு ஆகும். 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் தேவை. ஆனால் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் மட்டும் தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேல் காலியாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மஸ்தூர் பணியாளர்கள் மழைக்காலங்களில் தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். பின்னர் அடுத்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேளையில் மீண்டும் நியமனம் செய்யப்படுவார்கள்.

இதனால் நிரந்தரமான கொசுப்புழு ஒழிப்பு பணிகள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுவும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலுக்கும், உயிர் இழப்புக்கும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  இதனால்தான் மழைக்காலம் ஓய்ந்த பின்னரும் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்படுவது தொடர்கிறது. இந்த நிலையில் தற்போது சுகாதார பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக தனியார் வாயிலாக சிறப்பு பயிற்சிகள் அளித்து ஆட்கள் தேர்வு செய்ய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பயிற்சி பெற்ற பின்னர் களப்பணியில் ஈடுபட மேலும் 2 ஆண்டுகள் ஆகும். அதுவரை டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் எந்த அளவிற்கு நடைபெறும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்