SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்விப்ட் புதிய ஸ்போர்ட் எடிசன் விரைவில் வெளியீடு

2018-01-21@ 00:12:19

ஜப்பானின் சுஸுகி கார் தயாரிப்பு நிறுவனம், ஸ்விப்ட் காரில் புதிய ஸ்போர்ட் ஆட்டோ சலோன் வெர்ஷன் மாடலை இம்மாதம் டோக்கியோவில் வெளியிட உள்ளது. இந்த காரின் அழகிய தோற்றம் இந்த வெர்ஷனில் மேலும் மெருகேற்றி காட்டப்பட்டுள்ளது. பரவசத்தை தரும் சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் சலோன் வெர்ஷன் லிமிடெட் எடிசனாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், 2018 ஸ்விப்ட் ஸ்போர்ட் ஹேட்ச்பேக் மாடலை பின்பற்றி உருவாக்கப்பட உள்ளது. சிறப்பு எடிசன் மாடலாக வெளிவரும் இந்த கார் புதிய மேட் பிளாக் நிறத்தில் பூச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் இன்ஜினை கொண்டுள்ள ஸ்விப்ட் ஸ்போர்ட் செலோன் கார் 138 பிஎச்பி பவர் மற்றும் 230 என்.எம் டார்க் திறனை வழங்கும். டர்போசார்ஜிடு பெற்ற பெட்ரோல் இன்ஜின் மாடலான இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவைகளில் வெளிவரும்.

செயல்திறன், வடிவமைப்பில் பல தனித்துவமான அம்சங்களை பெற்றிருக்கும் இந்த ஸ்விப்ட் ஸ்போர்ட் செலோன் கார் முன்பக்க வீல் டிரைவிங் முறையில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண ஸ்விப்ட் காரின் 3வது தலைமுறைக்கான மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்படுகிறது. அப்போதே புதிய ஸ்விப்ட் காரின் ஸ்போர்ட் வெர்ஷனும் வெளியிடப்படவுள்ளது. இந்தியாவில் வெளியிடப்படும் மாருதி ஸ்விப்ட் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட இன்ஜினில் வெளிவருகிறது. மேலும், இன்ஜின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு இப்புதிய கார் 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள புதிய ஸ்விப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு எடிசனாக சுஸுகி வெளியிடும் இந்த கார், இம்மாதம் டோக்கியோ கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்