SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லீவு வேணுமா? அடி பிரிட்டிஷ் ‘‘சல்யூட்’’

2018-01-21@ 00:11:42

பாளை ஆயுதப்படை பிரிவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் பிரிட்டிஷ் பார்முலாவை தான் பின்பற்றுகிறார். அதாவது, ஆங்கிலேயர் ஆட்சியின் போது உயர் அதிகாரிகளை சந்திக்கச் செல்லும் ஆயுதப்படை போலீசார், யூனிபார்ம் அணிந்து மார்ச் பாஸ்ட் செய்து, சல்யூட் அடிக்க வேண்டும். அந்த நடைமுறை தற்போது இல்லை. ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அதிகாரி ஆங்கிலேயர் காலத்து நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார்.

அதாவது விடுப்பு எடுப்பதற்காக போலீசார் அவரிடம் அனுமதி கேட்கச் செல்லும் போது, யூனிபார்ம் அணிந்து, மார்ச் பாஸ்ட் செய்து, சல்யூட் அடிக்க வேண்டும். அப்போதுதான் விடுமுறை கிடைக்கும். இதில் தப்பு, தண்டா பண்ணினால் விடுமுறை கிடைக்காது. காய்ச்சல், உறவினர் மரணம் போன்றவற்றிற்கு திடீர் விடுமுறை கேட்கச் சென்றாலும் ஆங்கிலேயர் நடைமுறையை பின்பற்ற வேண்டும். இந்த புதிய அதிகாரியின் உத்தரவால் ஆயுதப்படை போலீசார் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். ‘கண்ணா இப்போது பிரிட்டிஷ் ஆட்சியெல்லாம் இல்லை. ஜனநாயக ஆட்சி நடக்கிறது’ என்கின்றனர் ஆயுதப்படை போலீசார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்