SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா மரணம் பற்றி ஆளாளுக்கு கருத்து கூறுவது சரியல்ல: ஓ.பி.எஸ். பேட்டி

2018-01-20@ 01:15:54

சென்னை : ஜெயலலிதா மரணம் பற்றி, சிலர் தனித்தனியாக கருத்துக்களை கூறுவது சரியானதல்ல என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக டெல்லியில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நடப்பது வழக்கம். அதுபோல் நடந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டு, வந்துள்ளேன். கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியில் நிலுவை ஆகியவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் மாணவர், டெல்லி மருத்துவ கல்லூரியில் இறந்த சம்பவம் குறித்து, என்ன நடந்தது என தமிழக அரசு கேட்டறிந்து கொண்டிருக்கிறது. மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் நிலவரத்துக்கு ஏற்றாற்போல் நிர்ணயம் செய்கின்றன. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பெட்ரோலிய பொருட்களை சேர்த்தால் விலை குறையும் என கூறுவது தவறான கருத்து. பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசு, அதிக சர் சார்ஜ் விதிப்பதால் விலை கூடுகிறது என கூறுவதும் சரியல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில், தமிழகம் குறைந்த சர் சார்ஜ் விதிக்கிறது. இதனை  மேலும் குறைக்க வாய்ப்பில்லை.

கவிஞர் வைரமுத்துக்கு கொலை மிரட்டல் விடுப்பது சரியானதல்ல. வன்முறையை தூண்டும் வகையில் யாரும் பேசுவதும், கருத்து கூறுவதும் தவறு. தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வைரமுத்து விவகாரத்தில் அதுபோல் பேசியுள்ளார் என்ற தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து, விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணை முழுவதுமாக முடிந்து, அதன் அறிக்கை வந்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்னதாக, ஜெயலலிதா மரணம் பற்றி, சிலர் தனித்தனியாக கருத்துக்களை கூறுவது சரியானதல்ல. இது விசாரணை நடைமுறையை திருப்பி விடும் செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • trans_porattam

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

 • neru_park_chinnamalai11

  நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

 • stalin_dmk11

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

 • PlasticawarenessLondon

  லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 • stalin_arrestkaithu11

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்