SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டு ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்தோம்

2018-01-20@ 01:02:20

* டிடிவி.தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு பேச்சு

தா.பேட்டை : முசிறியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏவும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ராஜசேகரன் பேசியதாவது: ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் பச்சை துரோகிகள். அதிமுக கட்சியும், சின்னமும் தினகரனிடம் வந்துசேரும். அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது. அம்மா அணியின் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரையில் வெளிவர இருக்கிறது. அதன்பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது எதிர்கட்சிகள் வெற்றி பெறுவதற்காக செய்த சூழ்ச்சிகளை முறியடிக்க முறையிட்டதை அடுத்து டிடிவி.தினகரன் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிடுங்கள் எனக்கூறி வெற்றிவேலிடம் சி.டியை கொடுத்தார். வீடியோ காட்சியை வெளியிட வெற்றிவேல் தயங்கியபோது ஒரு வழக்குதானே வரும் பார்த்துக் கொள்ளலாம் என தைரியம் கூறி அனுப்பி வைத்தோம். முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து மாஸ்டர் பிளான் செய்து ஆர்கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றிபெற்றோம். இவ்வாறு அவர் பேசினார்.
 
டிடிவி.தினகரன் மறுப்பு: இது குறித்து திருப்பூரில் நேற்று, டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நான் வெற்றிபெற 20 ரூபாய் டோக்கன் வழங்கியதாகவும், வெற்றி பெற வேண்டியே ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டதாகவும் பேசியுள்ளார். இது தொண்டர்களை உற்சாகப்படுத்தவே கூறியுள்ளாரே தவிர, அதில் உண்மையில்லை. அதுகுறித்து நான் அவரிடம் செல்போனில் பேசினேன்.  இந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க உரிமையுள்ளது. ஆனால் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்