SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரூக்கி மீது பலாத்கார குற்றச்சாட்டு அமெரிக்க மாணவி வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

2018-01-20@ 01:01:12

புதுடெல்லி : பலாத்கார வழக்கில் ‘பீப்லி லிவ்’ திரைப்படத்தின் துணை இயக்குனர் மகமூத் பரூக்கி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமெரிக்க ஆராய்ச்சி மாணவி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விவசாயிகள் படுகொலையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் பீப்லி லிவ். இதன் துணை டைரக்டர் மகமூத் பரூக்கி மீது அமெரிக்க ஆராய்ச்சி மாணவி ஒருவர் கடந்த 2015ம் ஆண்டு பலாத்கார புகார் அளித்தார். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் பரூக்கிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில், பரூக்கி மேல்முறையீடு செய்தார். அதில், ‘பரூக்கியும், ஆராய்ச்சி மாணவியும் நல்ல நண்பர்கள். ஆராய்ச்சி மாணவியின் சம்மதத்துடன்தான் அவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டனர்’ என பரூக்கியின் வக்கீல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் பரூக்கி விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  மாணவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாப்டே, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘‘உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் தலையிட விரும்பவில்லை’’ என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்