SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பத்மாவத் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

2018-01-20@ 01:00:39

புதுடெல்லி : ‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை  ரத்து செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மினியின் கதை, ‘பத்மாவத்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி இப்படம் நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், படத்துக்கு பல்வேறு மாநில அரசுகள் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, தடையை நீக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும், வழக்கை  மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த படத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில், “இந்த படத்தை வெளியிடுவது தொடர்பாக நேற்று நாங்கள் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளோம்’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, இந்த படம் திரைக்கு வருவது மேலும் உறுதியாகி உள்ளது.

எந்த முடிவும் எடுக்கவில்லை

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போபாலில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்யும்படி அட்வகேட் ஜெனரலிடம் கூறியுள்ளோம். அதன்பின் உச்சநீதிமன்றத்தில் ஏதாவது கூற முடியுமா என்பதை ஆய்வு செய்வோம். மத்தியப் பிரதேசத்தில் பத்மாவத் படம் ரீலிஸ் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்