SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமோனியா வாயு கசிந்ததால் கிராம மக்கள் வெளியேற்றம்

2018-01-20@ 00:56:09

பனாஜி : கோவாவில் டேங்கர் லாரியில் ஏற்றி சென்ற அமோனியா வாயு கசிந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். கோவா மாநிலம் வாஸ்கோ நகரம்- பனாஜி நெடுஞ்சாலையில் உள்ளது சிக்காலிம் கிராமம். இங்கு 300க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. நேற்று அதிகாலை டேங்கர் லாரி ஒன்று மர்மகோவா துறைமுகத்தில் இருந்து தொழிற்சாலை ஒன்றுக்கு அமோனியா வாயுவை ஏற்றி சென்றது. சிக்காலிம் கிராமம் அருகே வேகமாக சென்ற அந்த டேங்கர் லாரி அதிகாலை 2.45 மணியளவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில் இருந்து அமோனியா வாயு கசிந்தால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார், தீயணைப்பு படையினர் பொதுமக்களை ஊரை காலி செய்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர். அந்த சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த கிராமத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 பெண்கள், அமோனியா வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்