SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா 335 ரன்களில் ஆட்டமிழப்பு

2018-01-14@ 16:01:21

செஞ்சூரியன் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 335 ரன் எடுத்துள்ளது. செஞ்சூரியனில் முதல் இன்னிங்சில் 113.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் 94, அம்லா 82, டுபிளஸ்சிஸ் 63 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் அஸ்வின் 4, இஷாந்த் சர்மா 3 விக்கெட் எடுத்தனர்.

முன்னதாக மார்க் ராம் மற்றும் ஹாஷிம் அம்லா அபார ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா ரன் குவித்தது.
சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. அந்த அணியில் ஸ்டெயினுக்கு பதிலாக அறிமுக வீரர் லுங்கி என்ஜிடி (21 வயது) இடம் பெற்றார். இந்திய அணியில் தவான், சாஹா, புவனேஷ்வருக்கு பதிலாக கே.எல்.ராகுல், பார்திவ் பட்டேல், இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டனர்.
 
டீன் எல்கர், எய்டன் மார்க்ராம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தது. எல்கர் 31 ரன், மார்க்ராம் 94 ரன் (150 பந்து, 15 பவுண்டரி) எடுத்து அஷ்வின் சுழலில் ஆட்டமிழந்தனர். டி வில்லியர்ஸ் 20 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் கிளீன் போல்டானார். தென் ஆப்ரிக்கா 76 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்திருந்தது. அம்லா 79 ரன், கேப்டன் டு பிளெஸ்ஸி 9 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்