SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜூனியர் உலகக் கோப்பை: 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

2018-01-14@ 14:30:16

பே ஓவல்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில் பி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்திய அணிக்கு மும்பையைச் சேர்ந்த இளம்வீரர் பிருத்வி ஷா கேப்டனாக செயல்படுகிறார். ராகுல் டிராவிட் பயிற்சியாளர் ஆக உள்ளார்.

இந்நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியா உடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. அபாரமாக ஆடிய கேப்டன் பிருத்வி ஷா 94 ரன்கள் குவித்து, 6 ரன்னில் சதத்தை தவறவிட்டார். இதேபோல் மன்ஜோத் கர்லா 86 ரன்களும், சுபம் கில் 54 பந்தில் 63 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.  இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலியா 42.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tokyo_olympic_2020

    டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

  • kandhan_savadi11

    கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

  • LosAngelesSuperMarketshot

    லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்