SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்ற அதிருப்தி நீதிபதிகளை நேரில் சந்தித்து பார்கவுன்சில் உறுப்பினர்கள் சமரச முயற்சி!

2018-01-14@ 14:13:12

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், மதன் பி. லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லியில் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தன்னிச்சையாக செயல்படுகிறார். உச்ச நீதிமன்ற நிர்வாகம் சமீப காலமாக சரியாக செயல்படவில்லை. இந்த நிலை நீடித்தால், நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது;  அழிந்துவிடும்’ என பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாட்டை உடனடியாக தீர்க்கும்படி எதிர்க்கட்சி தலைவர்களும், நீதித்துறையை சேர்ந்தவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். இருப்பினும், இது நீதித்துறையின் உள்விவகாரம் என்பதால் அரசு இதில் தலையிட விரும்பவில்லை என்று நேற்று முன்தினம் கூறப்பட்டது. அதேநேரம், தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா மவுனம் காத்து வருகிறார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர, இந்திய பார் கவுன்சில் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து இந்த கவுன்சிலின் தலைவர் மனோன் குமார் மிஸ்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்றத்தில் நிலவும் பிரச்னைகளை மூத்த நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்து கூறி இருக்கக்கூடாது. உச்ச  நீதிமன்றத்தின் பிரச்னையை தீர்ப்பதற்காக எங்கள் அமைப்பின் சார்பில் 7 பேர் கொண்ட சிறப்பு குழு விரைவில் நியமிக்கப்படும். நீதிபதிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து முழு அரசியல் சாசன  அமர்வு விசாரித்து  முடிவு எடுக்க வேண்டும் என பார் கவுன்சில் சார்பில் தீரமானம் நிறை வேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

இதற்கிடையே இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக மூத்த நீதிபதி செல்லமேஸ்வரரை பார் கவுன்சில் குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். மனன்குமார் மிஸ்ரா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஒன்று மூத்த நீதிபதி செல்லமேஸ்வரரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு நீதிபதி வீட்டில் நடந்தது. மற்ற 3 நீதிபதிகளையும் சந்திக்க உள்ள இந்த குழு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவையும் சந்திக்க முடிவு செய்துள்ளது. இதனிடையே, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நான்கு நீதிபதிகளையும் சந்தித்து பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-04-2018

  இன்றைய சிறப்பு படங்கள்

 • ShangaiConstrutionBank

  ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

 • YemenAirstrikeSaudi

  ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

 • CherobylNuclearPowerplant

  32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

 • ImmanueltrumpMeet

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்