தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு ஆரோக்கியம், செழிப்பு கிடைக்க வாழ்த்துக்கள்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

2018-01-14@ 13:01:52

கொல்கத்தா: தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை நன்றி செலுத்தும் உயர்வான விழாவான உழவர் திருநாள் தை முதல் நாளில் கொண்டாடுவது தமிழர்களின் மரபு ஆகும். அப்படிப்பட்ட பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று தரணி எங்கும் தமிழக மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் முன் வண்ண கோலங்கள் தீட்டி புதுப்பானையில் புத்தரிசியிட்டு மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகள் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சாக குரல் எழுப்பி வழிபட்டனர். சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர்.
இதையொட்டி பல்வேறு மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாளில் எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு கிடைக்க எனது வாழ்த்துக்கள். இவ்வ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு : வெங்கையா நாயுடு விளக்கம்
பாக்.கில் மாயமான சீக்கியர் நண்பர் வீட்டில் கண்டுபிடிப்பு
மாணவர்களே உஷார்... 24 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிட்டது யுஜிசி
மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு கோரும் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு
அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு : மவுனத்தை கலைத்தார் அம்பரீஷ்
மரண தண்டனைக்கு தூக்குதான் சரியானது : உச்சநீதிமன்றத்தில் அரசு அறிக்கை
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
LatestNews
ஏப்ரல் 25 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56
06:12
உண்ணாவிரதம் சரத்குமாருக்கு விஜயகாந்த் வாழ்த்து
00:46
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: மும்பை அணிக்கு 119 ரன்கள் வெற்றி இலக்கு
21:47
நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
21:42
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் கைது
21:37
சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவம்: 3 பேர் கைது
21:24