SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபா முத்திரையுடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

2018-01-14@ 10:31:08

சென்னை: தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை நன்றி செலுத்தும் உயர்வான விழாவான உழவர் திருநாள் தை முதல் நாளில் கொண்டாடுவது தமிழர்களின் மரபு ஆகும். அப்படிப்பட்ட பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று தரணி எங்கும் தமிழக மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் முன் வண்ண கோலங்கள் தீட்டி புதுப்பானையில் புத்தரிசியிட்டு மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகள் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சாக குரல் எழுப்பி வழிபட்டனர். சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர்.

இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதற்கிடையே பாபா முத்திரையுடன் நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் இறுதியில் பாபா முத்திரை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்