SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி, அமித் ஷாவும் தமிழில் வாழ்த்து!

2018-01-14@ 10:06:35

டெல்லி: தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை நன்றி செலுத்தும் உயர்வான விழாவான உழவர் திருநாள் தை முதல் நாளில் கொண்டாடுவது தமிழர்களின் மரபு ஆகும். அப்படிப்பட்ட பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று தரணி எங்கும் தமிழக மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் முன் வண்ண கோலங்கள் தீட்டி புதுப்பானையில் புத்தரிசியிட்டு மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகள் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சாக குரல் எழுப்பி வழிபட்டனர். சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட தொடங்கினர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு எனது மகிழ்ச்சியான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்த வருட பொங்கல் திருவிழா அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்