SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வாடி வாசல் வழியாக காளைகள் சீறி பாய்ந்தன!

2018-01-14@ 08:40:38

அவனியாபுரம்: பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. மதுரை கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், விருதுநகர்  எம்.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இதில் பங்கேற்க 924 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காலை 7.40 மணி நிலவரப்படி 216 காளைகள் உடல் தகுதி பெற்று வாடிவாசல் சென்றன. மேலும் மாடுபிடி வீரர்கள் 624 பேரும்,  ஜல்லிக்கட்டில் களம் இறங்க தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி கோயில் காளைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழா ஏற்பாடுகளை மதுரை கலெக்டர் ஆய்வு செய்தார். இதன்பின் விதிகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்படும் என வீரர்கள், அமைச்சர்கள் உட்பட அனைவரும் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றனர்.

அனுமதி டோக்கன் வழங்கப்பட்ட 924 காளைகளுக்கும் இன்று காலை 6 மணி முதல் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. 10க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினர் காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கான உடல்தகுதி பரிசோதனை காலை 6 மணி முதல் நடைபெற்றன. ஜல்லிக்கட்டை காண பல்லாயிரக்கணக்கானோர்  திரண்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக ஜல்லிக்கட்டு நடைெபறும் அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 16 இடங்களில் பெரிய எல்இடி  திரைகள் அமைக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்