SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்த விவகாரம் முக்கிய குற்றவாளி நாதுராம் கைது: ராஜஸ்தான் போலீசார் குஜராத்தில் சுற்றி வளைத்தனர்

2018-01-14@ 05:36:12

சென்னை: இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுடப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான நாதுராமை ராஜஸ்தான் போலீசார் குஜராத்தில் பதுங்கியிருந்த போது சுற்றி வளைத்து பிடித்தனர்.  சென்னை கொளத்தூர் மகாலட்சுமி ஜூவல்லரி நகைகடையின் மேல் தளத்தில் ஓட்டை போட்டு 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, ₹2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தான் மாநில பாலி  மாவட்டம், ராமாவாஸ் கிராமத்தை சேர்ந்த நாதுராம் (28) மற்றும் ஜோத்பூர் மாவட்டம் பிலாரா கிராமத்தை சேர்ந்த தினேஷ் சவுத்ரி (20) ஆகிய 2 பேர் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

மதுரவாயல் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் 5 ேபர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் ெசன்றது. அப்போது பாலி மாவட்டம் ஜெய்தரன் காவல்  எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராம்புரா கலான் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் நாதுராம் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து, கடந்த டிசம்பர் 12ம் தேதி  நள்ளிரவு நாதுராமை சுற்றி வளைத்து பிடித்தனர்.இதில் ஏற்பட்ட மோதலில் நாதுராம் மற்றும் அவரது உறவினர்கள் தனிப்படையினரை தாக்கினர். இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடலில் முனிசேகரின் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். குற்றவாளி  நாதுராம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து பாலி மாவட்ட ஜெய்தரன் போலீசார் நாதுராம் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ராஜஸ்தான் போலீசார் நாதுராம் மீது கொலை வழக்கு பதிவு செய்யவில்லை. அவன் மீது தமிழக போலீசாரை தாக்கியதாக மட்டுமே வழக்கு பதிவு செய்தனர்.  இதை தொடர்ந்து,  நகை கடையில் கொள்ளையடித்த வழக்கு மற்றும் தமிழக போலீசாரை தாக்கிய வழக்கு தொடர்பாக நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்ட எஸ்பி தீபக் பார்கவ் தலைமையில்  தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் நாதுராம் பதுங்கி இருப்பதாக ராஜஸ்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதை தொடர்ந்து குஜராத் மாநில போலீசார் உதவியுடன் ராஜஸ்தான் போலீசார் நாதுராம் பதுங்கி இருந்த  இடத்தை நேற்றிரவு சுற்றி வளைத்தனர். இதை தொடர்ந்து உள்ளே புகுந்த போலீசார் நாதுராமை மடக்கி பிடித்தனர். அவனை கைது செய்த போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்