SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் 26ம் தேதி முதல் கமல் சுற்றுப்பயணம்

2018-01-14@ 05:36:11

சென்னை:  தமிழகத்தில் எல்லா துறையிலும் ஊழல் பெருகிவிட்டதாக நடிகர் கமல் புகார் கூறியிருந்தார். இவரது நடவடிக்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் பலரும் கமலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.  இதற்கிடையே அரசியலில் குதிக்க போவதாகவும், தனிக்கட்சி தொடங்குவதாகவும் நடிகர் கமல் அறிவித்தார். அதன்படி வரும் 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  கட்சி தொடங்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜா உள்ளிட்ட  மூத்தவர்களுடன் ஆலோசித்து அதை அறிவிப்பேன். வரும்  26ம்தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டம் உள்ளது. அதற்கான பயண விபரங்கள் வரும் 18ம்தேதி அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tokyo_olympic_2020

    டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

  • kandhan_savadi11

    கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

  • LosAngelesSuperMarketshot

    லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்