SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: 2 பேர் கைது

2018-01-14@ 05:36:09

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அரசு பாலிடெக்னி கல்லூரியில் விரிவுரையாளர் 1058 காலி பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா  என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து இடைத்தரகர்கள் என 200க்கும்  மேற்பட்டோர் பல லட்சம் பணத்தை பெற்று கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்றதாக இணையதளத்தில் பதிவேற்றம் ெசய்து மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்திய ேபாது பணத்தை பெற்று கொண்டு குறைந்த மதிப்பெண்கள் பெற்ற  நபர்களை அதிக மதிப்பெண்கள் பெற்றதாக இணையதளத்தில் வெளியிட்டு மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடியில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஈடுபட்டது தெரியவந்தது.அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேர்வுத்தாள் திருத்தம் செய்த ஊழியர்கள், குறுக்கு வழியில் பணி பெற முயற்சித்தவர்கள் உட்பட 156 பேர் மீது 417 பிரிவின் கீழ் மோசடியில் ஈடுபடுதல், 465 மற்றும் 468  பிரிவுகளின் கீழ் போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

முதற்கட்டமாக முகப்பேர் பகுதியை ேசர்ந்த கால் டாக்ஸி டிரைவர் கணேசன் என்பவரை கடந்த 28ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்  வெளியானது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், மதுரவாயலை சேர்ந்த ஷேக் தாவூத் நாசர்(32) என்ற தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில் கொளத்தூரை சேர்ந்த தனியார்  நிறுவன மேலாளர் ரகுபதி(34), அயனாவரத்தை சேர்ந்த சுரேஷ்பால் ஆகியோரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்